வெள்ளி, 28 டிசம்பர், 2012

உடுமலை மின் திட்டத்தில் மின்பாதை ஆய்வாளர் மற்றும் அதற்கு இணையான பொறுப்பிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்ட ஆணை





சனி, 15 டிசம்பர், 2012

ஜோதி

14வது மாநாட்டு J. ஹேமசந்திரன் நினைவு ஜோதி உடுமலையில் வரவேற்கப்பட்ட காட்சிகள்


புதன், 21 நவம்பர், 2012

நமது மத்திய அமைப்பின் 14வது மாநில மாநாடு நிகழ்ச்சிகள் துவக்கம் குறித்து, 20.11.2012 காலை 10.15 மணியளவில், உடுமலை மேற்பார்வை பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன் நடைபெற்ற விழாவில், பதினான்கு செங்கொடிகள் பறக்கவிடப்பட்டு, பட்டாசு வெடிக்கப்பட்டு, "மாநாடு வெல்லட்டும்", "மாநாட்டு கோரிக்கைகள் வெல்லட்டும்" என தொழிலாளர்களால்  முழக்கமிடப்பட்டது

திங்கள், 8 அக்டோபர், 2012

கணக்கீட்டாளர் கலந்தாய்வு கூட்டம் நாள் 07.10.12

வியாழன், 27 செப்டம்பர், 2012

கணக்கீட்டுப் பிரிவு கலந்தாய்வு


கணக்கீட்டுப் பிரிவு ஊழியர்கள்

கலந்தாய்வு கூட்ட அழைப்பிதழ்

நாள்: 07.12.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி
இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா தியேட்டர் பின்புறம், உடுமலைப் பேட்டை.


சிறப்புரை : தோழர் D. கோவிந்தராஜ்
அட்டைப்பட்டியல் குழு கன்வீனர், மாநில பொருளாளர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு, சென்னை.

  • முத்தரப்பு ஒப்பந்த்ததிற்கு எதிராக கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்களுக்கு பொறுப்புகள், கடமைகள் என உத்திரவிடப்பட்டுள்ளதை ரத்து செய்திட வேண்டுதல்
  • கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை அகற்றி சமவேலைக்கு சம ஊதியம் அடிப்படையில் கணக்கீட்டாளர் சம்பளம் பணியில் சேர்ந்த நாள் முதல் வழங்கிட.
  • பணிக்காலத்தில் மூன்று பதவி உயர்வு உத்திரவாதப்படுத்துதல்.
  • கணக்கு பிரிவில் உள்ளதைப்போல் கணக்கீட்டு பிரிவிலும் எட்டு அடுக்கு பதவி உயர்வு வாய்ப்பினை உருவாக்க வேண்டுதல்.
  • வசூல் பணியில் அவுட் சோர்சிங் முறையை ரத்து செய்தல்.
  • கணக்கீட்டு பிரிவில் கணிணிகள் அச்சு இயந்திரங்கள் பழுதடையாமல் இருக்கவும், மேலும் இணையதள சேவைகள் தடைபடாமல் இருக்கவும் உத்திரவாதப்படுத்துதல்.
  • 1982-ல் பணியில் சேர்ந்த கணக்கீட்டாளருக்கு 18 மாதப் பணிக்காலம் மொத்தப் பணியுடன் சேர்த்து கணக்கிட்டு அனைத்து பலன்களை வழங்குதல்.
  • கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள் பதவி உயர்வுக்கு எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் பதவி உயர்வு வழங்குவது.
  • தற்காலிக பணியிட மாற்றம் என்று பிற பிரிவு அலுவலகங்களுக்கு பணிக்கு அனுப்புவதை தவிர்த்திட
  • உடைந்துபோன இருக்கைகள் மாற்றி புதிய இருக்கைகள் வழங்க வலியுறுத்தல்
  • மதிப்பீட்டாய்வாளர் வருவாய் மேற்பார்வையாளர்களை கணக்கீடு, வசூல் பணி செய்ய நிர்ப்பந்திப்படை தவிர்த்திடுதல்.
  • 5வருடம் முடித்த்த கணக்கீட்டாளர் இரண்டாம் நிலை ஊழியார்களுக்கு பதவி உயர்வு வழங்கிடல்
  • பணிநிலை I ல் நிலையில் முதுநிலை மதிப்பீட்டு அலுவலர் பதவி உருவாக்கிட
     மேற்குறிப்பிட்ட பொருள் குறித்து விவாதிக்க கணக்கீட்டுப்பிரிவு ஊழியர்கள் சங்க வித்தியாசமின்றி இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் குறித்த நேரத்தில் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்,
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு 
உடுமலைப் பேட்டை

திங்கள், 17 செப்டம்பர், 2012

பயணப்படி தொடர்பாக EE/O&M/DPM அவர்களுக்கு எழுதப்பட்ட கடிதம்


பெறுநர்

செயற் பொறியாளர் அவர்கள்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்,
தாராபுரம் கோட்டம், (தீயணைப்பு நிலையம் அருகில்),
தாராபுரம்

அய்யா,

பொருள்: பயணப்படி உச்சபட்ச அளவு - சம்பந்தமாக.

       TANGEDCO வில் பணிபுரியும் ஒவ்வொருவருக்கும் பயணப்படி உச்சபட்ச அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கணக்கீட்டு பணி செய்பவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் முக்கியப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரி Special Certificate பயணப்படி பட்டியலில் கீழ்க்கண்டவாறு அளித்திடும்போது அதை பயணப்படி அனுமதிக்கும் அதிகாரி அவருக்கு மேல்நிலை அதிகாரியிடம் அனுப்பி Approval பெற்று, தொழிலாளி அளித்த பயணப்படி தொகையை வழங்கிடுவது நடைமுறை சான்றிதழ் கீழ்வருமாறு அளிக்கப்படும்.

Certified that the trips are bonafide and performed at the interest of the Board and geninue.

        ஆனால் மேற்கூறிய நடைமுறைக்கு மாறாக பயணப்படித் தொகை கோரியதை அளிக்காமல் குறைவான தொகையை வழங்கியுள்ள நிகழ்வு தாராபுரம் கோட்டத்தில் நிகழ்ந்துள்ளது. (உம்: திரு. பழனியப்பன், Helper cum Meter Reader, தளவாய்ப்பட்டிணம் பிரிவு)

       மேற்கூறிய தொழிலாளர் பணிக்கு உச்சபட்ச அளவு நிர்ணயிக்க முடியாது. ஏனெனில் அவர் அனைத்து மின் இணைப்புகளையும் கணக்கீடு செய்திடல் வேண்டும். எனவே அவர் பயணப்படி பட்டியலில் கோரியுள்ள தொகைளை Pass செய்து பட்டுவாடா செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

     மேலும் நடைமுறைகளை மாற்றிட உத்தரவு ஏதும் இருப்பின் எங்களுக்கு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

ஒப்பம் நாள். 14.09.2012
திட்டச் செயலாளர்,
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு
உடுமலை திட்டம்.

நகல்: கோட்டச் செயலாளர்/COTEE/CITU.
           உதவி மின் பொறியாளர்/ தளவாய்பட்டிணம் பிரிவு.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

உடுமலை கோட்ட சுற்றறிக்கை1

         கடந்த 15.09.2012 சனிக்கிழமை உடுமலை மின்வாரிய வளாகத்தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் கோட்டமட்ட கூட்டம் நடைபெற்றது. தோழர் A.பூபதி இராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தோழர்கள் சிவதாணு, பாலசுப்பிரமணியன், ஜெகானந்தா, இராமலிங்கம், கோவிந்தசாமி, மயில்சாமி, சின்னச்சாமி, அம்மாசை, அமிர்தவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தோழர் பாலசுப்பிரமணியன், மத்திய அமைப்பின் 14வது மாநில மாநாடு கோவையில் 2012 டிசம்பர் 15, 16, 17 தேதிகளில் நடைபெறுவது பற்றியும் அததில் உடுமலை கிளையின் செயல்பாடுகள் பற்றியும், மாநாட்டிற்கான நிதி, பேரணியில் பங்கேற்பு, ஊதிய உயர்வு தொடர்பான விஷயங்களை விளக்கிப் பேசினார். அதன் பின்னர் தோழர்கள் அனைரும் விவாதித்ததின் பேரில் கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டது. முடிவுகள் ஏகமனதாக ஏற்கப்பட்டது. தோழர்கள் R. பாலசுப்பிரமணியன், சின்னச்சாமி, பூபதி இராமகிருஷ்ணன் தலா ரூ.5000/- மாநாடு நன்கொடையாக அளித்திட ஒப்புதல் அளித்தனர். தோழர் சிவதாணு ரூ.3000/-ம், தோழர் ஜெகானந்தா, ரூ.2000/-ம் மாநாட்டு நன்கொடை அளித்திட ஒப்புதல் அளித்தனர். நன்கொடை அளித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் பூபதி ராமகிருஷ்ணன், சுவர் விளம்பரச் செலவு ஏற்பதாக தெரிவித்தார். இதைத்தவிர தங்களால் முடிந்த அளவு காய்கறி, தேங்காய் போன்ற பொருட்கள் தருவதாகவும் உத்தரவாதம் அளித்தனர். கூட்டத்தின் முடிவிவல் நிரந்தர உறுப்பினர் ஒருவருக்கு மாநாட்டு நன்கொடையாக குறைந்த பட்சம் ரூ.1000/- வசூலிக்க வேண்டும் எனவும் அதை செப்டம்பர் மாத சம்பளத்தில் வசூலித்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் ஊதிய உயர்வு பிரச்சாரம் செப்டம்பர் 26, 27 தேதிகளில் நடத்திடும் போதே நிதி வசூலும் செய்திட முடி வெடுக்கப்பட்டது. தோழர்கள் செப்டம்பர் 26, 27 தேதிகளில் விடுப்பு எடுத்து பிரச்சாரத்தில் கலந்து கொள்வது எனவும் ஆர்வம் மிக்க முன்னணி ஊழியர்களை ஈடுபடுத்திடவும் முடிவெடுக்கப்பட்டது. பிரச்சாரப் பயணவிபரம் கீழ்கண்டவாறு

26.09.2012 புதன் கிழமை

             காலை 8 மணி மத்திய அலுவலகம், உடுமலையில் இருந்து துவக்கம்,
             மின்வாரிய வளாகம், பண்டகசாலை, சிறப்பு பராமரிப்பு, மின்அளிவி
             பழுதுபார்பகம், 110 கிவோ. துணை மின் நிலையம் , உடுமலை.

26.09.2012  காலை 11 மணி 110 கிவோ. துணை மின் நிலையம், பாலப்பம்பட்டி,
             லைன்ஸ், 230 கிவோ. துணை மின் நிலையம்.
             காலை 11:00 மணி மைவாடி
             காலை 12:00 மணி துங்காவி
             மதியம் 12:00 மணி பூளவாடி
             மதியம் 02:00 மணி குடிமங்கலம்
======================================================================

27.09.2012 வியாழன்

             காலை 7.30 மணிக்கு மத்திய அலுவலகத்தில் இருந்து புறப்படுதல்
             காலை 8.00 மணி பூலாங்கிணறு.
             காலை 8.30 மணி கோமங்கலம்
             காலை 9.00 மணி வாளவாடி
             காலை 10.00 மணி வாளவாடி
             காலை 10.30 தளி
             காலை 11.00 மானுப்பட்டி
             காலை 12.00 கொமரலிங்கம்
             காலை 12.30 மடத்துக்குளம்
             காலை 01.00 கணியூர்
=======================================================================
இதைத் தவிர பகுதி நேரப்பணியாளர்கள் தலா ரூ.300/- மாநாட்டு நிதியாக அளித்திட முடிவெடுக்கப்பட்டது. மேலும் மாநாட்டுக்கான கொடி வரவேற்பு, தியாகிகள் ஜோதி போன்ற நிகழ்விலும் திரளாக கலந்திட முடிவு செய்யப்பட்டது.

                                                   புரட்சிகரமான வாழ்த்துக்களுடன்
                                                                                      தோழமையுள்ள
     
                                                                                        சி. ஜெகானந்தா
                                                                                   கோட்டச் செயலாளர்
 ========================================================================
உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் dnsecretaryudt@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.